வரிகள் செலுத்த பொதுமக்கள் அலையத் தேவையில்லை… புதிய இணையதளம் அறிமுகம்

வரிகள் செலுத்த பொதுமக்கள் அலையத் தேவையில்லை… புதிய இணையதளம் அறிமுகம்

வரிகள் செலுத்த பொதுமக்கள் அலையத் தேவையில்லை என்றும், இதற்காக புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்..
தமிழகம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை இணைத்துப் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாளச் சாக்கடை கட்டணம் மற்றும் குத்தகை இனங்களுக்கான வாடகைகளைச் செலுத்தவும், பிறப்பு இறப்புச் சான்றிதழ்களை ஆன்-லைன் மூலமாகப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.  
இதற்காக https://tnurbanepay.tn.gov.in/ எனும் முகவரியில், இணையதளத்தின் வாயிலாக வரிகளைச் செலுத்தலாம் என்றும், இந்த இணையதளத்தில் வரிகளைச் செலுத்தி ரசீதுகளை பிரின்ட் செய்துகொள்ளவும், இதற்கென உருவாக்கப்பட்ட ஒவ்வொருபயனாளரும் தனித்தனி பயன்பாட்டிற்கான யூசர் ஐடி. பாஸ்வேர்டு உருவாக்கி, தங்கள் பதிவுசெய்யப்பட்ட கைபேசி அல்லது மின்னஞ்சலில்  ஓ.டி.பி பெற்று ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.  மேலும், மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய தொகையை நெட்பேங்கிங், டெபிட், மற்றும் கிரடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும் தொகையைச்செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட சேவைக்குறைபாடுகள் எதுவும் இருப்பின், அதை ஆன்லைன் மூலமாகத் தெரியப்படுத்தவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக,  திருச்சி மாநகராட்சியில் பதியப்பட்டுள்ள பிறப்பு இறப்புச் சான்றிதழ்களைக் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாக வரிகள் செலுத்துவதற்காக எந்தவித கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. இந்த வசதியை  அனைத்துப் பொதுமக்களும் பயன்படுத்திக்கொண்டு, விரைவாக வரிகள் செலுத்தவும்,புகார்கள் எதுவும் இருப்பின் உடனடியாகத் தெரியப்படுத்தவும் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ள திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மாநகராட்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என திருச்சி மாநகராட்சி சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments

Disqus Shortname

Comments system