பல மில்லியன் தூரம்.. விண்ணுக்கு செல்லும் ராட்சச தொலைநோக்கி.. மனித வரலாற்றில் மாபெரும் ஆராய்ச்சி!


நியூயார்க்
: மனித குல வரலாற்றில் எப்போதும் தொலைநோக்கிகள் முக்கியமான இடம் உண்டு. மனிதன் விண்வெளி மீது கொண்ட ஈர்ப்பில் சிறிய அளவில் இருந்து தொலைநோக்கி உருவாக்கி படிப்படியாக வளர்ந்து தற்போது உலகம் முழுக்க பல நாடுகளில் ராட்சஸ தொலைநோக்கிகள் இருக்கின்றன.

ஆனாலும் விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து அடுத்தடுத்த மைல்கல்லை (மைல் எரிகல் என்று வைத்துக்கொள்வோமா?!!) தொட்டு வரும் விண்வெளிக்கு நேராக தொலைநோக்கிகளை அனுப்பிய வரலாறும் நடந்துள்ளது.

அப்படி நாசா அனுப்பிய விண்வெளி தொலைநோக்கிதான் Hubble தொலைநோக்கி ஆகும். 1990இல் அனுப்பப்பட்ட இந்த தொலைநோக்கி விண்ணில் மிதக்கும் உலகின் பெரிய தொலைநோக்கி ஆகும். இதை அப்படியே கொஞ்சம் ஓரமா உட்காரு தம்பி என்று சொல்வதற்காக வரும் ராட்சச தொலைநோக்கிதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!.. அதை பற்றிதான் இந்த செய்தி தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்

ஜேம்ஸ் வெப்

Hubble தொலைநோக்கி பூமியை 430 கிமீ தூரத்தில் சுற்றியபடி விண்வெளியை ஆராய்ச்சி செய்து வருகிறது. முதலில் வெறும் சாதாரண கண்ணுக்கு தெரிய கூடிய வெளிச்சங்கள் உள்ள பொருட்களை படம் பிடிக்கவே இது அனுப்பப்பட்டது. ஆனால் இதன் படங்கள் சரியாக இல்லாத காரணத்தால் பின்னர் அதில் அகச்சிவப்பு லென்ஸ் வைக்கப்பட்டு விண்ணில் அப்டேட் செய்யப்பட்டது. ஆனாலும் இதன் ரிசல்ட் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிலையிலேயே தற்போது விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்ள The James Webb Space Telescope (JWST) தொலைநோக்கி அனுப்பப்பட உள்ளது.

யாருடையது? நாசா மற்றும் ஐரோப்பா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கனடா ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த The James Webb Space Telescope (JWST) உருவாக்கி உள்ளது. Ariane flight VA256 ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.

என்ன ஆராய்ச்சி?


 Hubble போல இல்லாமல் The James Webb Space Telescope (JWST) அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்க கூடியது. அதோடு பூமியில் இருந்து பல மில்லியன் தொலைவில் இது நிறுத்தப்பட உள்ளதால் பல மில்லியன் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை இது ஆரைய முடியும். உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். உலகம் தொடங்கிய காலத்தில் இருந்த நட்சத்திரங்கள், கிரகங்களை இதை வைத்து பார்க்க முடியும். உலகின் முதல் கேலக்ஸி களை கண்டுபிடிக்கவும் இது உதவும். அகச்சிவப்பு கதிர்கள் என்பதால் இதன் இமேஜ் துல்லியமாக இருக்கும்.

அளவு

இதன் அளவு மிக் மிக பெரியது ஆகும். 20.197 மீட்டர் நீளம். 14.162 மீட்டர் அகலம் கொண்டது. (66.26 ft × 46.46 ft). இதில் ஒரு பக்கம் தங்க மூலம் பூசிய சோலார் பேனல்கள் சூரிய ஒளி எதிர்ப்பு பில்டர்களும் இருக்கும். இது 270 டிகிரி வெப்பநிலையை தாங்கும். இதன் மறுபக்கம் சூரியனுக்கு எதிர்ப்பக்கம் என்பதால் மைனஸ் 270 டிகிரி குளிர் வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எடை 6,500 kg.

10 வருடமாக திட்டம் ஐந்து வருடத்தில் முடிக்கலாம் என்று திட்டமிட்டு கடந்த 20 வருடமாக பணிகளை மேற்கொண்டு இந்த தொலைநோக்கியை உருவாக்கி உள்ளனர். கடந்த 3 வருடமாக பல காரணங்களால் இதன் லான்ச் தள்ளிப்போனது. 1996இல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இப்போதுதான் ஒருவழியாக முடிவிற்கு வந்துள்ளது. 500 மில்லியன் பட்ஜெட்டை தாண்டி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தூரம்


 Hubble போல 430 கிமீ தூரத்தில் சுற்றாமல் 1,500,000 km தூரத்தில் இது பூமியில் இருந்து நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து இது இருக்கும் குறைந்தபட்ச தொலைவே 374,000 km தூரம் ஆகும். இதனால் பூமிக்கு வெளியே மிக அதிக தொலைவில் விண்வெளி ஆராய்ச்சியை இது மேற்கொள்ள போகிறது.

அகச்சிவப்பு கதிர்கள் இவ்வளவு தூரத்தில் இது அகச்சிவப்பு கதிர்களை வைத்து செயல்பட வேண்டும் என்றால் அதற்கு வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். குளிரும் அதிகமாக இருக்க கூடாது. 0.6 to 28.3 μm என்ற அளவில் அகச்சிவப்பு கதிர்களை வெளியிட்டு இது கண்ணாடி திரைகள் மூலம் விண்ணில் இருக்கும் பொருட்களை பார்க்கும். இந்த கண்ணாடிகள் விண்ணுக்கு சென்ற பின் குடை போல விரியும்.


குளிர்ச்சி முக்கியம்

இதன் குளிர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும் என்பதால் L2 Lagrange point என்ற இடத்தில் இதன் சுற்றுவட்டப்பாதையை இதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். பூமிக்கு பின் அதன் நிழலில் சூரியனின் சுற்றும் வகையில் இந்த சுற்றுவட்டப் பாதை இருக்கும். இதனால் இரண்டின் ஈர்ப்பு விசையும் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மீது இருக்கும். அதே சமயம் வெப்பநிலையும் குளிருக் அதிகமாக இருக்காது.

எப்படி அனுப்பும்?

பூமியில் இருந்து நாளை ஏவப்பட்டதும் 10000 கிமீ சென்ற பின் ராக்கெட்டில் இருந்து இந்த தொலைநோக்கி பிரிந்து செல்லும். அதன்பின் இதில் இருந்து சூரிய கதிரிகளை தாங்கிக்கொள்ளும் ஷீல்ட் வெளியே வரும். பின்னர் படிப்படியாக ஒவ்வொரு பாகமாக திறந்து கடைசியாக 14,00,000 கிமீ தொலைவில் முழுமையாக சுற்றுவட்டப் பாதையை அடையும். 29 நாட்களில் இது சுற்றுவட்டப் பாதையை அடைந்து பின்னர் விண்வெளியை ஆராய துவங்கும்.









Post a Comment

0 Comments

Disqus Shortname

Comments system